முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்கள் பிள்ளைகள் வாழ கூட இடமில்லாமல் போவது நிச்சயம்....?!

Subbiahpatturajan





நிலவுக்கு விண்கலம் விடுவதாக இருந்தாலும் சரி  இந்திய ஒன்றியத்தின் இராணுவத்துக்கு அணுகுண்டை உருவாக்கியவரும் சரி ஏன் இந்த உலகில் பல நாடுகளின் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் சரி நமது தமிழ் இனத்தில் பிறந்தவர்களே ....
தவிர வேறு யாரும் இல்லை அது போக இன்னும் என்னற்ற வளர்ச்சியில் நமது பங்கு இந்தியா மட்டும் அல்ல மொத்த உலகிலுமே தமிழர்களின் ஆதிக்கம் இருந்தும் தனக்கென ஒரு உள்ளங்கை அளவுக்கு நாடு இல்லாத காரணத்தால் இந்த உலகில் தமிழன் எங்கு சென்றாலும் நாடற்ற அனாதையாகி நிற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

 எந்த தமிழனும் சிந்தித்து பார்க்க மறுக்கும் அதே வேளையில் தன் இனத்துக்கு என்று இந்த உலகில் ஒரு உள்ளங்கை அளவேனும் ஒரு நாடு வேண்டும் என்று முப்படை கட்டிய எம் தலைவரையும் இந்த இனம் அவர் யாருக்காக எதற்காக போராடினார் என்றே தெரியாமல் அவரையும் பிரிவினைவாதி தீவிரவாதி என்று தன் சொந்த இனத்து மக்களால் சொல்ல வைத்தது இந்த ஹிந்தியம் மற்றும் உலகம் அதையும் இந்த இனத்தில் பிறந்த பல அடிமை கூட்டம் நம்பி அவர்கள் போடும் எலும்பு துண்டுக்கு நாக்கை நீட்டி கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறது .

நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் தமிழர்களே....என்று சொல்லும் போது இந்த இனத்தை அழிக்கவே முடியாது இந்த மொழியை அழிக்க முடியாது என்று இன்னும் மல்லாக்க படுத்து கொண்டு இருக்கும் எம் தமிழினமே ...

நீ என்றுதான் விழித்து கொள்வாய் என்றே தெரியவில்லை உங்களுடன் பிறந்த பாவத்துக்கு உங்களை விட்டு விட்டும் போக முடியாமல் உங்களுக்க்காகவும் போராடி செத்த எம் மாவீரர்கள் ஆத்மா உங்களை ஒரு போதும் சும்மா விடாது .

உலகில் அழிந்த எத்தனையோ மொழிகள் எல்லாம் அந்த இனத்தின் அலட்சியத்தால் தான் என்பதை இந்த உலகம் அறியும் .

எந்த ஒரு இனத்தையும் அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும் அந்த இனம் தானாகவே அழிந்து விடும் என்பதே உண்மை அதை தொலைநோக்கி பார்த்துதான் நம் மொழி அழியாமல் இருக்க நமக்கென ஒரு உள்ளங்கை அளவு நாடு இருந்தால் நம் மொழியையும் நம் தமிழ் இனத்தையும் காப்பாற்றி விடலாம் என்று நினைத்துத்தான் எம் தலைவர் பிரபாகரன் போராடினார்.

 என்பதை இந்த இனம் ஏற்று கொள்ள மறுத்த காரணத்தால் இன்று நம் தமிழ் நாட்டில் எத்தனையோ அழிவு திட்டங்கள் ஒருபுறம் இன்னொரு புறம் திட்டமிட்டு அன்னிய குடியேற்றம் இன்னொரு புறம் வேலை வாய்ப்பு பறிப்பு என்று உலகத்தின் துணை கொண்டு சத்தம் இல்லாமல் நம்மீது ஒரு போரை நடத்தி கொண்டு இருக்கிறது இந்திய வல்லாதிக்கம் இதை உணர்ந்து கத்தி கொண்டு இருக்கிறோம் .

நீங்கள் இதையும் காதில் வாங்காமல் கடந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள் சுயநலத்தால் காரணம் உங்களுக்கு எவனும் எப்படியும் போகட்டும் என்ற நிலைக்கு உங்களை உளவியலாகவே தயார் படுத்தி விட்டான் இனிமேல் உங்களை எவனும் காப்பாற்ற முடியாது.

 நீங்கள் அழிவதை கொஞ்சமேனும் சமூக சிந்தனையுடன் வாழவாவது பழகி கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் பிள்ளைகள் வாழ கூட இடமில்லாமல் போவது நிச்சயம்.


 இந்த இனத்தில் எத்தனையோ மாமேதைகள் இருக்க இந்த இனம் இப்படி அடிமையாக வாழ்வதை நினைத்து அழுவதை தவிர ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் .

இந்த இனத்துக்கு என்று ஒரு நாடு இந்த பூமி பந்தில் மட்டும் இருந்து இருந்தால் இந்த இனம் தான் இன்று உலகை ஆண்டு கொண்டு இருக்கும் என்பதே உண்மை என்ன செய்வது நாம் போராடுவது எதற்காக யாருக்காக என்று கூட தெரியாத முட்டாள் கூட்டத்தில் பிறந்த ஒரே காரணத்தினால் தான் உங்களை போல் நானும் அடிமையாக வாழ வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

உங்கள் மனம் புண்படுத்தும் அளவிற்கு நான் ஏதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும்.

இந்தக் கட்டுரையின் நோக்கமே நம் சொந்த நாட்டில் நம் இனத்தை அழித்த கயவனுக்கு நம் வரிப்பணத்தை செலவு செய்து சிலை நிறுவுதல்... உங்களுக்கு ஏற்புடையதா... மனதில் ஏனோ வலிக்கிறது.

இதை ஏன் என்று எந்தத் தமிழனும் கேள்வி கேட்க மறுக்கும் அவலம் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது... ஏன்... பதில் சொல்லுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...