முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயா நானா கோபிநாத் சேனலுக்காக நேர்காணல் செய்த வீடியோ பார்த்தேன்.

Subbiahpatturajan

#சினார்தமிழன் #cinartamilan
#நீயாநானா #NeeyaNaana


சேனலுக்காக கோபிநாத் நேர்காணல் செய்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன்..அந்த ஆய்வாளர் மிகப்பெரிய தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம்..அவர்  தமிழகத்தின் தனித்தன்மையை நான்கு பாயிண்டுகளில் ஆதாரங்களோடு விளக்கியிருந்தார்..

1. தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே தொழிற்சாலைகள்  அதிகம்..பலரும் நினைப்பது போல் குஜராத்திலோ , மஹாராஷ்டிராவிலோ அல்ல.. இங்கு கிட்டத்தட்ட 38,000 தொழிற்சாலைகள் உள்ளன..அடுத்த இடத்தில் இருக்கிற மஹாராஷ்டிரத்தில் 28,000..(பத்தாயிரம் அதிகம்.).அந்தத் தொழிற்சாலைகள் சிறிய தொழிற்சாலைகளுமல்ல; 23 லட்சம் பேர் அவற்றில் பணியாற்றுகின்றனர்..மஹாராஷ்டிர மாநிலத்தில் 18 லட்சம் பேர்..ஒரு மாநிலத்தில் எட்டு விமான நிலையங்கள் இருப்பதும் இங்குதான்..

2.தமிழகத்தில் காமராஜர் காலத்தில் 40 கல்லூரிகள் என்றால் இப்போது 1000 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உண்டு..நான் வசிக்கிற கல்வியில் பின்தங்கிய தேனி மாவட்டத்திலேயே 30 கல்லூரிகள் இருக்கின்றன..(அன்றில் போட்டிகளுக்காக அழைப்பு அனுப்பிய போதுதான் இதைத் தெரிந்து கொண்டேன்..எனக்கே அப்போது ஆச்சர்யமாக இருந்தது)உயர்கல்வி பயிலுவோர் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம்.. 49% ..( மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட சில யூனியன் பிரதேசங்களின் சதவீதத்தை தமிழகத்துடன் ஒப்பிட முடியாது ) 2030 ல் இந்திய அரசு அரும்பாடுபட்டாவது அடைய வேண்டும் என்று நினைக்கிற இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகம் சர்வசாதாரணமாகத் தொட்டிருக்கிறது..நாம் பதினைந்து ஆண்டுகள் இந்தியாவை விட முன்னோக்கி இருக்கிறோம்..

3. சுகாதாரத்தை எடுத்துக் கொண்டால் அதற்கான அளவீடு குழந்தை இறப்பு விகிதம் தான்..இந்திய அளவில் 1000 க்கு 34 குழந்தைகள் இறந்தால் இங்கே 1000 க்கு 17 குழந்தைகள் மட்டுமே ..( 100% கூடுதல்)நாட்டின் தலைநகரமான டெல்லியை விட இந்த சதவீதம் குறைவு..

4. மனித மகிழ்ச்சிக் குறியீட்டிற்கான அளவீடாக பொருளாதார நிபுணர்கள்  கருதுவது தனிநபர் பொருளாதார வேறுபாடு குறைவாக இருப்பதுதான்..இந்திய அளவில் ஒப்பீடே இல்லாமல் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது..இங்குதான் நடுத்தர மக்கள் 80 % இருக்கிறார்கள்..கல்வி மற்றும் தொழில்துறையில் நிகழ்ந்த துரித வளர்ச்சியாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது.(எல்லோருடைய வாழ்க்கைத் தரமும் கூடியிருப்பதால்தான் இங்கு சாதாரண வேலைகளைச் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை..ஹிந்தி படித்தவர்கள் ( அதுவும் படிக்க இயலாதவர்களும்)இங்கே கூலி வேலை செய்ய வருகின்றனர்)

கண்டிப்பாக இதற்கு காமராஜர் ,கலைஞர் , எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகிய ,நான்கு முதல்வர்களும் , இங்கு நிலைபெற்றிருக்கிற சமூக நீதிக் கொள்கையும்தான் காரணம்..நீதிக்கட்சி போட்ட அடித்தளம் , காமராஜர் , அண்ணா விதைத்த சிந்தனைகள், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல் சூழலை சரியான திசையில் கலைஞர் நகர்த்திச் சென்றது ஆகியவை  வரலாற்றின் அதிசயம்தான்.. எம்ஜிஆர் , ஜெயலலிதாவும் கூட அரசின் நிர்வாகம் மற்றும் கொள்கைகளில் அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டிய சமூக அழுத்தத்தை கலைஞர்   உருவாக்கி வைத்திருந்தார்..

காமராஜரை மட்டும் உயர்வாகப் பேசிவிட்டு பிறரை எந்த ஆதாரமும் இல்லாமல் தவறாகச் சித்திரிப்பது உள்நோக்கம் கொண்ட திரிபு..சொல்லப்போனால் அவருடைய காலத்தில் மிகச்சிறிய அடித்தளம் மட்டுமே போடப்பட்டிருக்கிறது..மாபெரும் மாளிகையைக் கட்டி  எழுப்பியது 
ஆசிரியர் பெருந்த
தமிழ்நாட்டை ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும்..இவ்வளவு தெளிவான புள்ளிவிபரங்களுக்கும் பிறகும் இளைஞர்களில் சிலர் ' திராவிடத்தால் வீழ்ந்தோம் ' வகைப் பொய்ப் பிரச்சாரங்களை நம்புவது வருத்தத்திற்குரிய விஷயம்..

'காமராஜர் ஆட்சி அமைப்போம்' ' திராவிடத்தால் வீழ்ந்தோம் ''சிஸ்டம் சரியில்லை' , 'மாற்று வேணும்' , 'திராவிடக் கட்சிகளே ஆண்டுகிட்டு இருக்காங்க' ,' நா வலதும் இல்ல..இடதும் இல்ல மய்யமா சிந்திப்போம்' இவை எல்லாமே அறிவும் , விழிப்புணர்வும் நிரம்பிய இந்த மண்ணில்  கால்பதிக்கவே துப்பில்லாத ஒரு பாடவாதி கம்பெனி மாறுவேடத்தில் அனுப்பியிருக்கும் டம்மி நடிகர்களின் குரல்கள்தான்..

நீட் தேர்வு , இட ஒதுக்கீட்டைக் காலி செய்தல் , ஹிந்தித் திணிப்பு , மதவாத அரசியல் , புதிய கல்விக்கொள்கை ஆகிய அனைத்துமே தமிழகத்தை வடமாநிலங்களைப் போல் மாற்றி விடும்..

அன்பார்ந்த இளைஞர்களே!..வரலாற்றையும் , புள்ளி விபரங்களையும் சரியாகத் தெரிந்து கொண்டு அரசியல் பேசுங்கள்..வாட்ஸ்அப் வதந்திகளை நம்பாதீர்கள்..

மிகப்பெரிய வளர்ச்சி கண்ட மாநிலத்தின் எதிர்காலத்தை சாதி , மத உணர்வுகளில் சிக்கி வீணாக்கி விடாதீர்கள்..

தமிழகத்தின் அரசியல் இதுவரை ஆக்கப்பூர்வமான அரசியலாகவே இருந்திருக்கிறது..'மாற்று ' என்பதே மிகப்பெரிய வலை ..அதில் சிக்கிக் கொண்டால் நாம் இன்னொரு உத்திரபிரதேசமாக மாறி விடுவோம்..

தமிழக அரசியலே இந்தியாவின் வழமையான அரசியலுக்கு எதிரான மாற்று அரசியல்தான் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...