முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

BANK OF TAMILNADU தமிழர்கள் வங்கி....🤔

Subbiahpatturajan



தமிழ்நாடு அரசு வங்கி" BANK OF TAMILNADU 
உதயமாகிறது!
✨✨✨


தமிழ்நாடு அரசின் சார்பாக வங்கி ஆரம்பிப்பதை கொண்டாடுகிறீர்களே அதனால் என்ன பலன் என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.

அவற்றை விரிவாக பார்ப்போம்.

1. எந்த ஒரு வங்கியிலும் பொதுமக்களின் சேமிப்பு பணம் பல்லாயிரம் கோடி இருக்கும்.

இன்றைய நிலையில் தமிழர்கள் பல்லாயிரம் கோடி சேமிப்பு பணம் தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் இருக்கின்றன

. அந்த பணம் வட இந்திய பெருமுதலாளிகளின் தொழிலுக்கு கடனாக கொடுக்கப்படுகின்றன.

உதாரணமாக ஆஸ்திரேலியாவில் சுரங்க்த்தொழில் செய்ய அதானிக்கு ஆறாயிரம் கோடி கடனை SBI வங்கி வழங்கியது.

 தமிழ்நாட்டில் இருப்பவர்களின் பல நூறுகோடி சேமிப்பு பணம் SBI வங்கியில் இருக்கும். ஆனால் அவை முதலீடாக தமிழ்நாட்டிலேயே வருமா என்றால் அது கேள்விக்குறிதான்.

அவை பெரும்பாலும் வட இந்திய பெருமுதலாளிகளுக்கு கடனாக கொடுக்கப்பட்டு அவற்றில் பல நூறு கோடி வாராக்கடனாக கொள்ளையடிக்கப்படுகிறது. தமிழர்களின் சேமிப்பு தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யப்படும்போது வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

2. வங்கியின் மேலாளரும் காசாளரும் வட இந்தியாவில் இருந்து வந்து இந்தியில் திமிராக ஆணவமாக பேச வேண்டிய தேவை இருக்காது.


3.வங்கியின் படிவங்கள் தமிழில் இருக்கும். இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என்று இருக்க முடியாது.

4. வேலைவாய்ப்பில் 69 % இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். இந்தியாவில் வேறு எந்த வங்கியிலும் இந்த அளவிற்கு இட ஒதுக்கீடு இல்லை.

5. அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களைச் சென்றடைய இந்த வங்கியை பயன்படுத்த முடியும்.


6. நிதியமைச்சர் பலமுறை சொன்னது போல நம்மிடம் தகவல்கள் இல்லை. ஒரு வங்கியின் மூலம் அரசுக்கு கிடைக்கப்போகும் தகவல்கள் ஏராளம். ஒவ்வொரு பகுதியின் வளரச்சியைக்கூட கணக்கிட முடியும்.

7. அ்ரசின் இன்னொரு நிதி ஆதாரமாக இருக்கும்.


8. எதிர்காலத்தில் வட இந்திய வங்கிகள் திவாலாகும்போது குறைந்த பட்சம் நம் மக்களின் பணமாவது பாதுகாப்பாக இருக்கும்.

9. வெளிநாடு வாழ் தமிழர்கள் தாராளமாக தங்களது சேமிப்பிற்காக இந்த வங்கியை நம்பிக்கையுடன் பயன்படுத்துவார்கள்.


10. உலகின் பொருளாதார வளர்ச்சி வங்கிகளுக்கு பிறகுதான் பலமடங்கு வளர ஆரம்பித்தது. அதுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மூலதனத்தை கொடுத்தது. ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான வங்கியை உருவாக்குவது அவசியம்.

இதனால் இன்னொரு லாபமும் இருக்கிறது.

தமிழ்நாடு அரசுக்கு வருமானம் தரும் டாஸ்மார்க்கை மட்டுமே நம்பி
இருக்க வேண்டிய நிலை தவிர்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...