முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

" அந்த மச்சுவீட்டுக்காரி அலப்பு பிடிச்சவப்பா... கன்யாகுமரி ஸ்பெஷல்

Subbiahpatturajan


#சினார்தமிழன் #kuttystory #kanyakumari #tamil

ஓலைப்பெட்டி மிட்டாய்.. 


2000 ஆம் ஆண்டு துவங்குவதற்கு முன்பு வரை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா, வள்ளியூர் முருகன் கோயில் கார்த்திகை மாத தெப்பத்திருவிழா, வடக்கன்குளம் முருகன் கோயில் சித்ராபவுர்ணமி திருவிழா பார்க்க சென்றால் திருவிழா சீசனுக்கு வரும் மிட்டாய் கடைகளில் இந்த பனையோலை பெட்டிகள் தொங்க விட பட்டிருக்கும்..
அப்பா திருவிழாவுக்கு சென்று ஓலைப்பெட்டியில் கட்டி வாங்கி வரும் மிட்டாய் பெட்டியை பார்த்து...

 "அப்பா  பண்டம் வாங்கிட்டு வந்துருக்காவ " என மகிழ்வோடு  சொன்ன 90'S  ஹிட்ஸ்களுக்கு தெரியும் ஓலைப்பெட்டி மிட்டாய் பற்றி....

தேன்குழல் மிட்டாய் அல்லது ஏணிப்படி மிட்டாயை கருப்பு கலர் இரும்புச்சட்டியில் அதே இரும்பு சட்டி கலரில் இருக்கும் மாஸ்டர் அண்ணாச்சி விறகு அடுப்பு தீ மூட்டி துளையிட்ட செம்பில் மாவை ஊற்றி டிசைனாக சுடுவதை பார்க்கவே கூட்டம் கூடும்.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரின்னு சொல்லுலவாங்களே அதே மாதிரி... 

சுடச்சுட இருக்கும் அந்த தேன்குழல் மிட்டாயை அந்த ஓலைப்பெட்டியில் நிரப்பி மெல்லிய சணல் மூலம் கட்டி தருவார்கள். இரண்டு நாட்கள் திறக்காமல் வைத்தாலும் லேசான தேவையான காற்று செல்ல ஓலைப்பெட்டியில் இடைவெளி இருப்பதால் மிட்டாய் நமத்தோ அல்லது கெட்டோ போகாது.. 

சூடான பொருளை தற்போதைய நாகரீக கேரிபேக் அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து கட்டுவதால் பாலிஎத்திலீன் என்ற நச்சு உருவாகி தின்பண்டத்தில் கலந்து உடலுக்குள் சென்று ஊறு விளைவிப்பது போல் ஓலைப்பெட்டி மனித உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை.. 

ஓலைப்பெட்டியில் நிறைய வகை உண்டு.. பெரிய சைஸ் பெட்டியை கடவம் அல்லது கடவாபெட்டி என அழைப்பார்கள் .. 20 கிலோ கொள்ளளவு கொண்டது.. பனை மட்டையை கழுத்து பகுதியில் வட்டமாக வளைத்து பனை ஓலையால் பின்னியிருப்பார்கள்.. 

மிட்டாய் வாங்கும் இந்த ஓலைப்பெட்டியை பிளாப்பெட்டி என அழைப்பார்கள்.. பிளவு ஓலைப்பெட்டி அதாவது ஓலையை பிளந்து பின்னிய பெட்டி என்பதன் அர்த்தமே பிளாப்பெட்டி .. சரியாக ஒரு கிலோ எடையை தாங்கும்.. 

தன் மகனுக்கு அதிக நகை சீதனமாக கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் சீதனமாக எதிர்பார்த்து பெண் தேடும் பையனின் அம்மாவை...

 " அந்த மச்சுவீட்டுக்காரி அலப்பு பிடிச்சவப்பா... மொவனுக்கு பிளாப்பெட்டி நிறைய நகை போடுற பொண்ணு வேணுமுன்னு வருகிற நல்ல சம்மந்தத்த எல்லாம் கழிச்சு விட்டுட்டு இருக்குதா..


இப்படியே போனா அந்த பயலோட கதி காமராஜர், விவேகானந்தர் கதை மாதிரி தான் ஆவ போவுது பாறேன் மக்கா " ன்னு ஊருக்குள் முன்னாடி பிளாப்பெட்டி கதையை சகஜகமாக எடுத்துக்காட்டாக பேசுவதுண்டு.. 

பயன்படுத்தி முடித்து தூர எறிந்தாலும் மனித உடலுக்கும் , மண்ணுக்கும்,  சுற்றுச்சூழலுக்கும் கேடு தராமல் மக்கி போய் விடுவது ஓலைப்பெட்டி.. 
பிளாஸ்டிக் உபயோகத்தை தாறுமாறாக பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் மக்கி போகாமல் நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வழித்தடங்களை அடைத்து மண்ணை மாசுபடுத்துவது அனைவரும் அறிந்தது தான்..பிளாஸ்டிக் உபயோகத்தின் கெடுதலை மக்கள் அவர்களாக உணரும் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை  நிறுத்த முடியாது... 

ஆனால் இம்மாதிரியான ஓலைப்பெட்டி, காகிதப்பை, துணிப்பை, சணல்பை போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்காவாவது செய்யலாம்... பூமி மாசு அடைவதை தவிர்க்கலாம்.. பூமியை நாம் பாதுகாத்தால் பூமி நம்மை பாதுகாக்கும்.. 

முன்பு ஓலைப்பெட்டியில் தேன்குழல் மிட்டாய் சாப்பிட்ட நினைவுகளை நினைத்து பார்த்த நியாபகத்தில் எழுதிய பதிவு... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...