முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இனிமேல் நமக்கு படிக்காமலே வேலை கிடைக்கும் இடம்...ஏது தெரியுமா...?!

Subbiahpatturajan

Cinartamilan

இனிமேல் நமக்கு படிக்காமலே வேலை கிடைக்கும் இடம்...ஏது தெரியுமா...?!

மக்களிடையே இருக்கும் சில பழக்கவழக்கள் மட்டுமே மூடத்தனம் அல்ல..
 திராவிடம் என்பதும் திராவிட நாடு என்பதும் திராவிட மக்கள் என்பதும். திராவிட.. என எதை மொழிந்தாலும் அதை மொழிந்தவரும் மூடர். அதை சரியென ஓடுகிறவரும் மூடரே! ஏன் இதை இப்படி சொல்லுகிறேன் என்றால்.. அது எங்கும் இல்லாதது. அல்லது அது எங்கும் காணக்கிடைக்காதது மட்டுமல்லாமல்.. மக்களை கானலுக்குள் அழைத்துச் செல்லும் ஒரு மூடத்தனமுமாகும்.

வால் இழந்த நரி ஒன்று ஒடி வந்து, மற்ற நரிகளை பார்த்து.. நமக்கு வாலொரு தொல்லையாக இருக்கிறது. அதனால் அதை என்னைப்போல் வெட்டிக் கொள்ள வேண்டும்.‌ என சொல்வதைப் போன்று திராவிடர் என தங்களை அழைத்துக் கொள்வோர்கள்.. வாழும் மொழி தமிழோடு வளரும் கலைகள் இயல், இசைத் தமிழோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழரிடம் பேசிக் கெடுத்தனர். 

தமிழர்கள் உலகத்திற்கே பல கலைச் செல்வங்களை தந்தவர்கள். இன்றைய கணித எண் வடிவமும் வரிசையும் உலகத்திற்கே கொடுத்தவர்கள் தமிழர்கள். இசைத்தமிழை படைத்து இந்தியாவின் பழமை இசையாக்கியவர் தமிழர்கள்.  திருக்கோயில்களை ஊர்தோறும் கட்டி எழுப்பியவர்கள் தமிழர்கள். திருமறைகளையும் பண்டாய நான் மறைகளையும் படைத்தவர்கள் தமிழர்கள். இயற்கையை சிலை வடிவங்களாக்கி அழகு பார்த்து பூத்தூவி மகிழ்தவர்கள் தமிழர்கள். இவற்றில் எதுவுமே இல்லாது வந்த ஈவெரா சொன்னாராம்.. இதுவெல்லாம் உனதில்லையென.. உடனே எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, திராவிடர் என சொல்லிக் கொண்டால்.. ஆரிய பேய்களெல்லாம் ஓடிவிடுமாம்? எப்படி இருக்கிறது.. ஒன்னுமில்லாதவருக்கு நம் உயிர்ப் பொருளை தூக்கி வீசிவிட்டு, அவர் பின்னால் சென்றது நல்லோர் செயலாகுமா?

இல்லாத திராவிடத்தை நம்பிய தமிழர்களால் இன்று தமிழ்நாடே அழிவு நிலைக்கு வந்துள்ளது. தமிழர் யாரும் தமிழராய் இல்லை. தமிழ்மொழியை சரியாக பேசவும் தெரிவதில்லை. தமிழ் மாதம் ஆண்டு நாட்களை கூட தமிழில் சொல்லத் தெரிவதில்லை. தங்களின் பிள்ளைகளுக்கு சரியான தமிழ் பெயர்களை கூட சூட்டத்தெரிவதில்லை. கணக்கிலும் கூட தமிழில் எழுதுவதும் சொல்வதும் சொல்லத் தெரிவதும் இல்லை. அதுமட்டுமா?..'தங்களுக்கு உழைத்த தலைவர்களைத் தெரியாது. தமிழரை புகழ்ந்து பேசியவர்களை தெரியாது. தமிழ் மண்ணிற்கும் மொழிக்கும் நாட்டிற்கும் உழைத்தவர்களை தெரியாது. எழுதியவர்களை இலக்கியங்களை படைத்தவர்களை.. தன்னையே தாய்த் தமிழ் மொழிக்காக தந்தவர்களை தெரியாது. தீக்குளித்து மாண்டு போனவர்களையும் தெரியாது.

ஆனால், காசு பணம் என குறியாக சேர்த்து வைத்து,  தமிழரை இழிவு படுத்தியவர்களையே தலைக்கும் மேல் வைத்து யாரோ சொன்னார்கள் என்பதற்காக.. தனக்கொரு கூலியும் இல்லாமலும் கூட சுமக்கத் தெரியும். பிற மொழிகளை படிக்கத் தெரியும். பிற மொழியாளர்களுக்கும் இனத்தவருக்கும் விழுந்து விழுந்து வேலை செய்யத் தெரியும். எந்த ஒரு மரத்தின் நிழலிலும் வேறு எந்த மரமும் வளராது. தமிழர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.



அதனால் இப்பொழுது.. தமிழர் நாடு குப்பைக் கூளங்களின் இருப்பிடமானது. எங்கு பார்த்தாலும் தமிழில் பெயர் பலகைகள் இல்லை. தமிழில் கடைகளின் பெயர்கள் எழுதப்படவில்லை. பார்த்தால் இது தமிழ் நாடுதானா? அல்லது வேறுநாட்டில் தான் தமிழர் குடியிருக்கின்றோமா? என்ற ஐயம் உருவாகிறது. மனம் உறுத்துகிறது.

நாம் நம் சாதிகளை பார்த்து நமக்குள் எல்லோரையும் திட்டித் தீர்த்தாகி விட்டது. பணக்காரர்களை பார்த்து முறைத்து.. முறைத்து எல்லோரும் சமமென ஏழைகளாகி விட்டோம்.

 இனிமேல் நமக்கு படிக்காமலே வேலை கிடைக்கும் இடமானது பிறரை புகழ்ந்து பேசும் அரசியலும் அதை தொடர்ந்து ஓடும் ஓட்டமும் மட்டுமே.

 நாம் இனிமேல் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் கவிபாடவும் நிற்கும் தமிழருக்கு எதிரானவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவும் வணங்கி காலம் கழிக்க வேண்டியதுதானோ?.

தமிழர் பெருமைகள் புகழ் மிக்கன. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில்  முதன்முதலாக அச்சேறிய மொழி நம் தமிழே! அதனை அச்சேற்றிய இடம் இன்றைய கோவா மாநிலம். அங்கு வந்த போர்த்துக்கீச்சிய கிருத்துவ பாதிரியார்கள் தமிழில் அவர்களின் விவிலியத்தை அச்சிட்டனர். அப்பொழுது இந்தியாவில் பெரும்பகுதி இசுலாமியர்களின் ஆட்சி. அவர்களின் மொழி உருதும் இல்லை. பெரிது.. பெரிது என சிலரால் தூக்கி நிறுத்தப்படுகின்ற சமக்கிருதமும் இல்லை. அப்படி எழுந்த தமிழில் இப்பொழுது நாம்.. நம் மொழியில் பாடம் நடத்த புத்தகங்கள் இல்லை. கல்வி பயின்ற பள்ளிக்கூடங்கள் பிறமொழிக் கல்விக் கூடங்களாக்கப்பட்டு, தமிழை  தேய்கிறன திராவிட ஆட்சிகள். 

அது அச்சேறிய இடம் இன்றைய கோவா ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் புழங்கும் இடமாக இருந்திருக்கிறது.. அதன் பின்னால் நம் நிலம் குறைந்து பிறர் மொழி இடமாக மாறிட தமிழ்நாட்டின் இன்றைய பகுதி குறைந்துவிட்டது. 

வள்ளலார் பெருமான் வாழ்ந்த காலத்தில் கூறியதை போல.. தமிழரெல்லாம் மாற்றாரை துறவிகளென்றும் ஆன்மீக வள்ளல்களென்றும் ஓடியது போல்.. இன்றைய தமிழர்களும் அப்படி பிறரோடு சேர்ந்து ஓட.. திராவிடம் குதூகளிக்கிறது.

நம்முடைய வரலாறுகளை நாமே பேசாமல் போனால்.. அதை யார்தான் பேசுவது? நம் வரலாறுகளை நாம் போற்றாமல் பிறர் யார் போற்றுவார்? நம் மொழியை நாம் படிக்காமல் பிறர் யார் படிப்பர்? இங்கே தமிழ் மொழிக்கே வாழ்வின்றி போனால்.. தமிழர் யாரும் உரிமையோடு எழுந்து.. வாழ்ந்து எப்படி செழிக்க முடியும்?.

தமிழராய் தோன்றியவரெல்லாம் முட்டாள்களா என்ன? தமிழர் ஆங்கிலேய அடிமைத்தனம் புகுந்த போதும் எதிர்த்தவர்கள். அது நிலைகொண்ட போதும்  எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் போர் தொடுத்தவர்கள். காந்திக்கும் முன்பே.. எழுந்த நம் செண்பகராமன் பிள்ளை மறைக்கப்பட்டார். கப்பலோட்டிய தமிழர் ஒதுக்கப்பட்டார். ஆனால் ஆங்கிலேயரே ஆளட்டும் எனப் பேசிய ஈவெராக்கள் மதிக்கப்படுகின்றனர். இதுதான் நம்மிடையே உள்ள உள்ளக்குறை.

தமிழர் பரப்பை நாமே உணராமல் போவதற்கே இங்கே திராவிடம் பேசும் போலி தமிழ்தேசிய உணர்வு உள்ளோர் உலவுகின்றனர். நம் பரப்பு இந்திய மண்ணிற்கு உள்ளும் வெளியேயும் என பல நாடுகளில் நீளுகின்றது நமது ஆட்சியும் அரசியலும் பண்பாட்டுச் செல்வ வளங்களும் நிறைந்து நிற்கின்றன. இவற்றை யெல்லாம் தேய்த்து அழிக்கவும் அதை உண்டு செழிக்கவும் என திரியும் திராவிடக் கருத்தியலை விட்டு தமிழர் நாம் வாழும் வழிகளை கண்டு தெளியவேண்டும். நாம் நம் கரங்களை பிடித்தே நிற்போம். நமக்கெதற்கு திரிந்து போன திராவிடம்? நமக்கெதற்கு தோள் சுமையாக  நமக்கும் மேலே பிறர்? தமிழர் நமக்கு யாரும் சரி சமமல்ல. தமிழர் நாமே மாற்றாருக்கும் வழிசொல்லி வாழ்வோம்! பேசுவோம்.. எழுவோம்! எழுக தமிழினம் தமிழரென்றே!..
 வாழ்த்துக்கள்!
'தமிழ்நாடு தமிழருக்கே'.. எனச்சொல்லி முழக்கமிட்டவர்களை வணங்கி கைபிடிப்போம்! வணக்கம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...