முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாசில்தார் நிலத்தை அளக்க காலதாமதம் செய்தால்...?!

Subbiahpatturajan

Cinartamilan

*தாசில்தார் கடமை தவறினால்*

#cinartamilan #நிலஅளவை #தாசில்தார்

நாமக்கல் மாவட்டத்தில் சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார். அதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100/- க்கு பணம் கட்டியிருந்தார். ஆனால் தாசில்தார் மனையை அளக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். ஆனால் பயனில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும் மற்றும் இழப்பீடாக ரூ. 1 லட்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

வழக்கில் ஆஜரான தாசில்தார், மனையை அளக்க இரண்டு பேர் ஆட்சேபனை தெரிவித்தால் அளக்கவில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம்...

மனை சேகருக்கு பாத்தியமானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆவணங்கள் அனைத்தும் சேகர் பெயரிலேயே உள்ளது. ஆனால் தாசில்தார் இரண்டு பேர் நிலத்தை அளந்து கொடுக்க ஆட்சேபனை செய்வதாக கூறுகிறார். அந்த இரண்டு பேரின் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சேபனை செய்பவர்களிடமிருந்து அபிடவிட் பெறவில்லை. ஆட்சேபனை செய்பவர்களை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை. ஆட்சேபனை செய்பவர்களுக்குரிய எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. ஆட்சேபனை செய்பவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தது யார் என்று தெரியவில்லை. பதிவு செய்தவரின் பெயரும் இல்லை. சொத்துக்கு சம்மந்தமே இல்லாத இருவர் ஆட்சேபனை செய்ததாக கூறி சர்வே பண்ணுவது மறுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆட்சேபனை செய்ததால் இடத்தை அளக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், அப்படி அளக்க மறுக்கலாம் என்பதற்கு ஏதாவது சட்டம் அல்லது விதிகள் உள்ளதா? என்று தாசில்தாரால் கூறப்பட முடியவில்லை. ஆட்சேபனை தெரிவித்தால் நிலத்தை அளக்க தேவையில்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்றால் அதற்கும் விளக்கமில்லை. எந்த சட்டமும், ஆணையும் இல்லாமல் ஆட்சேபனை செய்கிறார்கள் என்று கூறி நிலத்தை அளந்து கொடுக்காமல் இருப்பது சேவைக்குறைபாடு ஆகும். தாசில்தார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்துள்ளார். இது சேகருக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தும் செயலாகும். அரசு அதிகாரிகள் சட்டப்படியே ஒரு செயலை செய்யவோ அல்லது மறுக்கவோ முடியும்.

தாசில்தார் சேகர் ஒரு நுகர்வோர் கிடையாது என்றும் வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியாது என்றும் ஒரு வாதத்தை வைத்துள்ளார். ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் " காஸியாபாத் வளர்ச்சி முகமை Vs பல்பீர்சிங்" என்ற வழக்கில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அனைத்து அரசுத்துறை அலுவலங்களில் நடக்கும் சேவைக்குறைபாடுகளுக்கும் பொருந்தும். அனைத்து அரசு அலுவலகங்களும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் வரும். பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் அலட்சியமாக இருந்தால், அந்த அதிகாரிகளை நுகர்வோர் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் " ஹரியானா நல வளர்ச்சி முகமை Vs சாந்தி தேவி" என்ற வழக்கில், ஒரு இந்திய குடிமகனுக்கு தீராத மன உளைச்சலையும், நிம்மதியின்மையையும் ஒரு அரசு அதிகாரி பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல்" Dr. R. ஜெகன் Vs Director motor vehicles maintenance department & others என்ற வழக்கிலும், Shiksha vihar sehkari avaas samithi Ltd Vs Chairman Ghaziabad Development Authority and Another என்ற வழக்கிலும் இதே கருத்தை உத்தரவாக தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கியுள்ளது.

மேற்கண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வழக்கை பார்க்கும் போது, தாசில்தார் பணியில் அலட்சியமாக இருப்பதும், சேவைக்குறைபாடு செய்திருப்பதும் நன்றாக தெரிய வருகிறது.

ஆகவே 15 நாட்களுக்குள் சேகரின் நிலத்தை தாசில்தார் அளந்து கொடுக்க வேண்டும் மேலும் ரூ 10,000/- இழப்பீடாகவும், ரூ. 2000/- வழக்கு செலவுத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
 நல்ல தீர்ப்பு. 

எனவே, அரசு பணியிலிருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டுகிறேன்.
(இந்த செய்தியை பதிவு செய்து வைத்துக் கொள்ளவும். தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிரவும், நன்றி.)

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
இது நம்மை போல் உள்ள பாமரன் ஒன்றும் செய்ய இயலாது அது தான் உண்மை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...