முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் வாத்துக் கூட்டத்தின் அங்கத்தினர் அல்ல.,

Subbiahpatturajan

நான் வாத்துக் கூட்டத்தின் அங்கத்தினர்கள் அல்ல., 

"பிழைக்கத் தெரியாத ஆள்,
ஏமாளி,
திசைமாறிச் சென்றவர்,
சம்பாதிக்கத் தெரியாதவர்"

இந்தப் பட்டங்கள்தான் பலரும் எமக்கு இடும் பட்டங்களாக இருக்கின்றன.

இதில் இன்னும் சிலர், ஆரம்பத்துல நீயா நானா கோபிநாத், ரங்கராஜ் பாண்டேகூட ஒரே நிறுவனத்துல வேலை செஞ்சவர் நீங்க. ஏன் அவர்களைப் போல ஆகலை? என்ற கேள்விகள் வேறு கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு என் பதில் கேள்வி...

"என்னைக்காவது உங்ககிட்டயையோ, பொதுவெளியிலையோ நான், (நீயா நானா)கோபி போல, (சாணக்கியா)பாண்டே போல ஆக விரும்புகிறேன் அப்டின்னு சொல்லி இருக்கேனா? அப்டி ஆக விரும்பி முயற்சி செஞ்சு தோற்றுவிட்டேனா? 
அப்டி ஒரு எண்ணம் என் கனவில்கூட வந்ததில்லையே. நான் ஏண்டா அவர்களைப் போல ஆகனும்? 

அவர்கள் விரும்பிய இலக்கை அவர்கள் அடைந்தார்கள். அதை நோக்கி நான் செல்லவில்லை.

நான் விரும்பி நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலக்கை நோக்கி அவர்கள் வரவில்லை.

அவ்வளவுதான்.

அது அவர்கள் பாதை. இது எமது இனத்தின் பாதை.

எதற்கு ஒப்பிடுகிறீர்கள்?

ஒப்பிட்டுப் பார்த்து ஜட்ஜ்மென்ட் செய்வது, பொதுப்புத்தி அடிமைத்தனத்தின் அடிப்படையில கூட்டம் அல்லது பெரும்பான்மை மக்கள் எதை, எந்த கருத்தை, எந்த இயக்கத்தை, கட்சியைப் பின்பற்றுகின்றனரோ, அதன் தவறுகளைப் பற்றி கேள்வி கூட கேட்காமல் கண் மூடித்தனமாக வாத்துக் கூட்டத்தைப் போல பின்பற்றுவது ஆகியவை சுய சிந்தனை, சுய மரியாதை எனும் தன் மதிப்புணர்ந்தவர் செய்யும் செயலல்ல.

நான் வாத்துக் கூட்டத்தின் அங்கத்தினர் அல்ல.


இந்த உலகில் ஒவ்வொரு தனி மனிதரிடமும் ஒரு தனித் தன்மை உள்ளது.

அதில் சிறந்த தனித் தன்மை கொண்டவனாக என்னைக் கூர் படுத்த விடாது முயன்று கொண்டிருக்கிறவன் நான்.

குடும்பம், குழந்தை, கடன் வாங்கி ஈஎம்ஐ-ல் வீடு கட்டுதல், கார் வாங்குதல், புகழ் பெறுதல் மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்று கருதுபவர்களுக்கு பிற அறிவை நோக்கிய, சமூகத்தைப் பற்றிய, தனித்த ஞான, மெய்ஞான வெற்றிகளைப் பற்றி அறிய இயலாது. புதுமை பற்றி சிந்திக்க நேரமும், வாய்ப்பும் இருக்காது.

நீங்கள் வெற்றியாக எண்ணுபவை தேவையானவை என்றாலும்கூட தற்காலிகமானவை. 

கோவிட் பெருந்தொற்றுகூட இந்த தற்காலிகம் என்பதை உணர்த்தியிருக்கிறது.

நான் தற்காலிகத் தேவையை மட்டும் நிறைவேற்றிக் கொள்ளப் பாடுபடுபவன் அல்ல.


அடுத்து,

சங்க பரிவார ஹிந்துத்துவத்தை ஆதரிக்கிற, திராவிடத்தை ஆதரிக்கிற பத்திரிகை, ஊடகவியலாளர்கள் எப்படி பணம் சம்பாதித்து, பெயரோடும், புகழோடும், வசதி வாய்ப்புகளோடும் இருக்கிறார்கள். 

ஆனால், நீங்கள் அந்த வாய்ப்பு இருந்தும், லட்சத்தில் மாத சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தும் பிழைக்கத் தெரியாது, ஏமாளியாக இருக்கிறீர்களே? தமிழ், தமிழர், தமிழியம், தமிழ்த் தேசியம் பேசித் திரிகிறீர்களே 

எனும் கேள்வி.

இந்தக் கேள்வியின் நேரடித் தகவல்

"என்னையை, எங்களைப் போல அடிமையாக இருந்துவிட்டுப் போ. ஏன் மாற்றி யோசிக்கிறாய்? ஏன் அடிமைப் படுத்தும் முதலாளித்துவ எஜமானர்களை விட்டு விலகி யோசிக்கிறாய் ?"

என்பது மட்டும்தான்.

இவர்களில் பலர் பொதுவுடமைப் புரட்சியாளர்கள் கார்ல் மார்க்சையும், ஈவேரா பெரியாரையும் தங்கள் கடவுளர்கள் என்கிற ரீதியில் கூறிக் கொள்பவர்கள். அதுதான் உச்சகட்ட காமெடி.

கண்மூடிய மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகும் கல்லாதவர்க்கும், இத்தகைய கற்றறிந்தவர்கள் ஆகும் அடிமைத்தனத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு?!

பல கற்றறிந்த பேராசிரியர்கள், முனைவர்கள் என்று அறியப்பட்டவர்களும், பத்திரிகை, ஊடகவியலாளர்களும்கூட அடிமைகளாகத்தானே இன்று பணம் படைத்த கட்சிகளின் துதிபாடிகளாக செயல்பட்டு வாழ்கிறார்கள்?!

நான் அடிமையாகத்தான் வாழ்வேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு, அந்த சுகத்தை இழக்க விரும்பாதவர்களுக்கு அவர்களின் பார்வையில் நான் "பிழைக்கத் தெரியாத, திசை மாறிய ஏமாளியாகத் தெரிவதில்" வியப்பேது?

அப்படித்தான் தெரியும்.

மாற்றி சிந்தியுங்கள். பொய்யாகக் கட்டமைக்கப்படும் மாய வரலாற்றை நம்பி ஏமாறாதீர்கள். 

கார்ல் மார்க்சை. ஈவெரா பெரியாரை அவர்களின் தனித்த அறிவுப் பார்வையில், அவர்களை நீங்கள் உள்வாங்கியிருந்தால் இப்படிப்பட்ட கேள்விகளை என்னைப் போன்றவர்களிடம் கேட்க மாட்டீர்கள். கேட்க வேண்டிய தேவை உங்களுக்கு வந்திருக்காது.

ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுத் தீர்ப்பெழுதாதீர்கள். 

சிலரை மட்டும் வெற்றி பெற்றவர்கள் என்றும் அவர்களைப் போலவே எல்லோரும் ஆகுங்கள் என்று கூறாதீர். 

நீங்கள் குறிப்பிடும் வெற்றி, புகழை விடப் பல மடங்கு வெற்றிகளை ஈட்டும் பலரை இப்படித்தான் அவர்களின் தனித்த திறனில் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறீர்கள்

ஒவ்வொரு தனி மனிதரிடம் இருக்கும் சிறப்புத் தன்மையை மதியுங்கள். 

மானுடத்தின் தன்மதிப்பு, அறிவு, மாண்பு இதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...