இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகளில் இருந்தே புதிய புதிய தகவல்கள் உள்ளன.நீங்களும் அதைப் பாருங்கள்
1000 ரூபாய் நோட்டில் வைர முத்திரை
500-வட்டம்
100- முக்கோணம்
50-சதுரம்
20-செவ்வகம்
10- ஏதுமில்லை.
இதற்குக் காரணம் பார்வையற்றோர் எளிமையாக ரூபாய் நோட்டை அடையாளம் காண ஏற்படுத்தப்பட்ட ஒரு குறியீடு.
இந்தியாவில் கையூட்டு (லஞ்சம்) பெறுவதைத் தடுக்க ரிசர்வ் வங்கியால் ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் சுழி மதிப்பு ரூபாய்த் தாள்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படம் 1996ம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது.
இதற்கு முன் எந்த தேசத் தலைவரது புகைப்படமும் இன்றி வெறும் நோட்டாகவே வெளியிடப்பட்டு வந்தது.
1954–1978 வரை 5000, 10,000 ரூபாய் நோட்டுகள் வரை வெளியிடப்பட்டுள்ளன. (அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை).
ஒரு பத்து ரூபாய் நாணயம் தயாரிக்க 6.10 ரூபாய் செலவிடப்படுகிறது.
நாணயத்தின் முன்புற அடிப்பக்கத்தில் ஒருசில குறியீடுகள் உள்ளன.
அவை நாணயம் தயாரிக்கப்பட்ட இடத்தை குறிக்கும்.
வைரம் - மும்பை
நட்சத்திரம் - ஐதராபாத்
வட்டம் - நொய்டா
குறியீடுகள் அற்றவை - கொல்கத்தா
1917ல் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலரை விட 13 மடங்கு அதிகம்.
(இந்திய ரூபாயின் 1 ரூபாய் அமெரிக்காவின் 13 டாலர்களுக்கு சமம்.
இது இந்திய சுதந்திரத்தின் போது 1 ரூபாய் = 1 டாலர் என சரிந்தது.
தற்போது 80 க்கு அருகில் உள்ளது.
இதற்குக் காரணம் பெரும்பாலும் வெளிநாட்டுப் பொருள்களைப் பயன்படுத்துதல்).
20 ரூபாய் நோட்டுகள் மட்டும் அந்தமானில் அச்சிடப்படுகின்றன.
கருத்துகள்