முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூழ்நிலையால் நேசிக்கபடுவனாக இருப்பதை விட பயமுறுத்தும் தன்மை கொண்டவனாக ..."

Subbiahpatturajan

Cinartamilan

சூழ்நிலையால் நேசிக்கபடுவனாக இருப்பதை விட பயமுறுத்தும் தன்மை கொண்டவனாக இருப்பதே அரசனுக்கு... நல்லது"

"மனிதர்கள் அடிப்படையில் பொய்யர்களும், சுயநலவாதிகளும், ஏமாற்றுக்காரர்களும்தான்" என்கிறார்-  மாக்கியவெல்லி.

ஆனால் அவர்கள் நம்மிடம் நல்லவர்களாக நடந்து கொள்கிறார்களா, கெட்டவர்களாக இருக்கிறர்களா என்பது அவர்களுக்கு நாம் எந்த முகத்தை காட்டுகிறோம் என்பதை பொறுத்தது"

"அன்பானவர்களாக நாம் இருந்தால் நம்மிடம் எல்லாரும் அன்பாக, நல்லவர்களாக தான் இருப்பார்கள். நம்மிடம் தன் சிறந்த முகத்தை காட்டுவார்கள்.

 ஒரு அரசன் அன்பானவனாக மட்டுமே இருந்தால் போதாது. அவனது பகைவர்கள் கொடூரமானவர்களாக இருந்தால் அவன் இழைக்கவிருக்கும் தீமைகளுக்கு அஞ்சி மக்கள் அவன் பக்கம் சேர்ந்துவிடுவார்கள்.

அதனால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய தருணத்தில் மிக கடுமையானவனாக அரசன் நடந்துகொள்ளவேண்டும்., துரோகத்தை மிக, மிக கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்போதுதான் எதிரியின் மீதான அச்சத்தால் அவர்கள் நம்மை விட்டு நீங்கமாட்டார்கள், நமக்கு துரோகம் இழைக்கமாட்டார்கள்.

ஆனால் எப்போதுமே கொடுங்கோலனாக, சர்வாதிகாரியாக ஒரு அரசன் இருந்தால் மக்களே புரட்சி செய்து அவனை வீழ்த்திவிடுவார்கள். அதனால் மற்ற சமயங்களில் தாராளமானவனாக, நீதிமானாக ஒரு அரசன் இருக்கவேண்டும்.

"நல்லவன் போல காட்சியளிப்பது ஒரு தோற்றமாக தான் இருக்கவேண்டும்" என்கிறார் மாக்கியவெல்லி. உள்ளுக்குள்ளும், வெளியேயும் ஒருவன் நல்லவனாக இருந்தால் ஆப்பு வைத்து விடுவார்கள். 

வெளியே அப்பாவி மாதிரி காட்சியளித்தாலும் உள்ளுக்குள் அனைத்து சூழ்ச்சிகளிலும் கைதேர்ந்தவனாக ஒரு அரசன் இருக்கவேண்டும்.

ஆனால் முழுநேர சூழ்ச்சிக்காரனாக இருந்தால் பொய்யன் என அவனை அனைவரும் ஒதுக்கிவிடுவார்கள். அதனால் வீரம் என வருகையில் சிங்கமாகவும், சூழ்ச்சி என வருகையில் நரியாகவும் இருக்கவேண்டும்.

"ஒரு அரசன் எப்போதும் மக்களின் வெறுப்புக்கு மட்டும் ஆளாகிவிடகூடாது" என எச்சரிக்கிறார் மாக்கியவெல்லி.

 அவர்களை தனக்கு எதிராக திரும்பும் வண்ணம் கொடுமைக்காரனாக இருக்ககூடாது. ஆட்சியை நல்லபடி நடத்தும் பொருட்டே வன்முறை பயனாகவேண்டுமே ஒழிய பழிவாங்கும் நோக்கில் அது அமையக்கூடாது

ஆனால் "அன்பால் தான் ஒரு நாட்டை ஆளமுடியும். அன்பை விட மேலானது ஒன்று உள்ளது எனில் அது அச்சம்தான். இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் சாத்தியம் எனும் சூழலில்- நேசிக்கபடுவனாக இருப்பதை விட பயமுறுத்தும் தன்மை கொண்டவனாக இருப்பதே அரசனுக்கு நல்லது"

"It is better to be feared than to be loved" - Niccolo Machiavelli



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...