முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"வாழ்க்கையில் எப்போதும் திருப்தி அடையாமல் இருப்பதற்குக் கற்றுக் கொள்;

Subbiahpatturajan


*உணர்வு*-

**ஒவ்வொரு  கணமும் என் வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்  அந்த அனைத்து விமர்சகர்களுக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்*

*வாழ்க்கையில் மேன்மை அடைவதற்கான சந்தர்ப்பம் :*

ஒரு கிராமத்தில்   ஒரு சிற்பி வாழ்ந்து வந்தார்.   அழகான சிற்பங்களைச் செய்வது அவர் வழக்கம்.    இந்த வேலையின் உதவியால் கிடைத்த  வருமானத்தில், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார்.    சிறிது காலத்திற்கு பிறகு,  அவரது மகனும் இதே சிற்ப வேலையை தன்னுடைய இளம் வயதிலேயே செய்யத் தொடங்கினான்.    அவனது சிற்பங்களும் மிக அழகாகவே  இருந்தன.   தன் மகனின் தொழில் திறமையைப் பார்த்துத் தந்தை மகிழ்ச்சி அடைந்தார்.    ஆனாலும்  தந்தை, மகனின் ஒவ்வொரு சிற்பத்திலும் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டுவார்.     அவர் தன் மகனிடம், ‘ நீ நன்றாக செய்கிறாய்.   அடுத்த முறை இந்த குற்றமும் வராமல்  பார்த்துக் கொள்ள முயற்சி செய்’ என்று சொன்னார்.

தந்தையின் அறிவுரைக்கு மகன் எதுவும் மறுத்துச் சொல்ல மாட்டார்.   அப்பாவின் அறிவுரையை பின்பற்றி,  தன் சிற்ப வேலையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருந்தார்.    அதன் விளைவாக,  மகனது சிற்பங்கள் தந்தையின் சிற்பங்களை விட மேன்மையுடையதாக  ஆகியது .    மக்கள் மகனின் சிற்பங்களை அதிக விலை கொடுத்து வாங்கும்படியான நேரமும் வந்து விட்டது.    அதே நேரத்தில்,  தந்தையின் சிற்பங்கள் முன்பு இருந்த அதே விலையில்தான் தொடர்ந்து விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. 

தந்தை தொடர்ந்து தன் மகனின் சிற்பங்களில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார்.    ஆனால், இந்த செயல் இப்போது மகனுக்கு மகிழ்ச்சி தர வில்லை.    எனவே வழக்கம் போல்,  அந்த தவறுகளை, மனதில்  விருப்பம் இல்லாமல் ஏற்றுக் கொண்டான்.    ஆனால்,  தொடர்ந்து  அப்பாவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப தன் சிற்பங்களில்  அபிவிருத்தி செய்து கொண்டு இருந்தான்.    

இறுதியாக மகனின் பொறுமை மிகவும் குறைந்த நிலைக்கு வந்தது.   அவனது அப்பா  குறைகளைச் சுட்டிக் காட்டும் போது,  அவன் அப்பாவைப் பார்த்து ,”நீங்கள் ஒரு சிறந்த சிற்பியாக இருந்தும், உங்கள் சிற்பங்கள் குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன. 

   உங்களுடைய அறிவுரை, இனிமேல் எனக்குத் தேவை இல்லை.    என்னுடைய சிற்பங்கள் குற்றம் இல்லாமல் மிக ஒழுங்காக இருக்கின்றன”  என்றான்.    

மகன் இப்படிக் கூறியதைக் கேட்ட தந்தை அதன் பிறகு,  அவனுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்தி விட்டார்.    சில மாதங்கள்,  மகன் மகிழ்ச்சியாக இருந்தான்.    அவனது சிற்பங்கள் முன்பு விரும்பப்பட்டதைப் போல,  இப்போது இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.  அது மட்டுமல்லாமல்,  சிற்பங்களின் விலையும் உயர்வது நின்று விட்டது. 

அவனால் முதலில் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.   எனவே, தன் அப்பாவிடம் சென்று உதவி செய்யுமாறு கேட்டான்.    தந்தை மிக அமைதியாக மகனைக் கவனித்தார்.   இப்படி ஒரு நாள் வரும்  என்பதற்காக தயாராக இருந்தார்.    மகனுக்கும்  இது புரிந்தது.    அவன் அப்பாவிடம், ‘ இப்படி நடக்கப் போகிறது பற்றி, உங்களுக்கு எப்படித் தெரியும் ?’ என்றான்.    அதற்கு தந்தை, ‘ஆமாம்.   இதே சூழ்நிலையை,  நானும் எதிர் நோக்கினேன்’ என்றார்.   மகன்,  ‘ஏன் அதை என்னிடம் கூறவில்லை ?’ என்றான்.    

தந்தை,  ‘ ஏனென்றால், அதைப் புரிவதற்கு நீ விருப்பப்படவில்லை.    உன்னைப் போல் நான் நல்ல சிற்பங்கள் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும்.   சிற்பங்களைப் பற்றிய என் கருத்து தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.    என்னுடைய அறிவுரையால், உன்னுடைய சிற்பங்கள் மேன்மை அடைய வேண்டும் என்பதும் இப்போது  இல்லை.    ஆனால், நான் எப்போது உன் சிற்பங்களில் இருக்கும் குறைகளை, காண்பித்த போது,  நீ செய்த செயலில்  திருப்தி அடையாமல் இருந்தாய்.   அதன் பிறகு  நீ அதில் அபிவிருத்தி செய்ய முயற்சி செய்தாய்.    அந்த முயற்சிதான் உன் சிற்பங்கள்  மேலும் மேன்மை  அடைவதற்கும்,  அதன் முடிவாக நீ வெற்றி அடைவதற்கும் காரணமாக இருந்தது.    இதற்கு மேல்  முன்னேற்றம் செய்வதற்கு வாய்ப்பு ஏதும் இல்லை என்று, ...

 உன்னுடைய வேலையில் நீ திருப்தி அடைந்து விட்ட அந்தக் கணமே உனது வளர்ச்சி நின்று போய் விட்டது.    

மக்கள் எப்போதும்  உன்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள்.    இதுதான் இப்போது உனக்கு போதுமான அளவு உன் வேலைக்கு  புகழ் கிடைக்காததற்கும்,  உனக்கு போதுமான அளவு பணம் கிடைக்காததற்கும் காரணம் ஆகிறது’ என்றார்.   


மகன்  சிறிது நேரம் அமைதியாக இருந்து கொண்டு,  அதன் பிறகு  அப்பாவிடம், ‘ அப்படியானால் நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?’ என்றான்.

மகனுடைய கேள்விக்கு பதிலாக, அப்பா அளவில் சிறியதாயினும் மதிப்பு மிக்க ஒரு பதிலைக் கொடுத்தார்.

 முன்னேறுவதற்கும்,  மேன்மை அடைவதற்குமான வாய்ப்பு எப்போதுமே  இருக்கிறது என்பதை நீ நம்பு.    இந்த ஒன்றுதான்  எப்போதும் உன்னை ஊக்கப்படுத்தி,  எதிர்காலத்தில் உன்னை முன்னேற்றம் அடையச் செய்யும்.    எப்போதும் உன்னை மேன்மை அடையச் செய்யும்” என்றார்.

எந்தவிதமான தவறும் செய்யாமல் இருப்பது சாத்தியம் என்கிற கருத்து,  முழுமைத்துவம் பற்றிய ஒரு மாயை;   அது ஒரு கட்டுக்கதை ஆகும்.    அடுத்தவர்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள் இவை இரண்டையும் சமமாக கவனிப்பதில்தான் உண்மையான செயல்திறன் இருக்கிறது.    இந்த ஒன்றுதான்  முன்னேற்றம் அடைவதற்கான ஒரே வழி ஆகும்.

*சாரிஜி:*

*விமர்சனங்களை, கோபமோ அல்லது கவலையோ இல்லாமல் மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.    அதனை உன்னைத் திருத்திக் கொள்ளுவதற்குப் பயன் படுத்து.     அதனை வரவேற்கவும் செய்*.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...