முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி...!?

Subbiahpatturajan

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி.!

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்? மோடி.! 

வெறும் உப்பு மாவுக்கும்  பாமாயிலுக்கும் தான் குமரி மாவட்டத்தில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்களாக ஆனார்கள் என்று ஊரில் சங்கிமங்கி தலைப் பிரட்டைகள் துடித்து எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

  ஆதிக்கத்திலிருந்து விடுதலை.!

 --------------------------------------------------------

1800 களில் (சாணார்) பெண்கள் நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர்..உள் ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்" எனப்பட்டது.முழங்காலிற்கு கீழும் இடுப்பிற்கு மேலும் ஆடை (முண்டு) அணியக் கூடாது.! பொது வெளியில் முலைகளை திறந்து காட்டிக் கொண்டே தான் திரிய வேண்டும்.
திருவிதாங்கூர் மன்னன் நகர்வலம் வரும் போது பாதையெங்கும் வரிசையாக திறந்து காட்டிக் கொண்டே தான் நிற்க வேண்டும். குறிப்பாக நம்பூதிரி பெண்கள் முன்னால் அடுத்த சாதிப் பெண்கள் கொங்கைகளை ஆட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும். (அவளுகளுக்கு அப்படி என்ன எரிச்சலோ) மீறி, மானம் மறைத்த முலைகள் அறுபட்டு வீழ்ந்தன. பொதுச் சந்தைகளில் அயினிப் பழம் பறிப்பது போல முலைகளைப் பறித்தார்கள்.! முலைகளின் அளவிற்கு ஏற்ப "முலை வரி" விதிக்கப் பட்டது.! இந்தக் கொடுமைக்கு எதிராக பெண்கள் கொதித்து எழுந்தார்கள். போராட்டம் வெடித்தது.!

அவ்வப்போது போராட்டங்களும் அடக்கு முறைகளும் தொடர்ந்தன. இந்நிலையில்
'மீட் 'எனும் ஆங்கில பாதிரியாரின் முயற்சியால் 1823 இல் கிறிஸ்தவ பெண்கள் குப்பாயம் எனும் மேலாடை அணியலாம் என்று  உத்தரவாயிற்று. 

தன்மானமுள்ள நாடார் பெண்கள் மானத்தை மறைக்க கிறிஸ்தவர்களாக மாற ஆரம்பித்தனர்.! 

கிறிஸ்தவம் திருவாங்கூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புனிததோமாவால் தொடர்ந்த நிலைமாறியது.
 ஹிந்து நாடார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த மானமுள்ள நாடார்களும் குப்பாய உரிமைக்காக  வெகுண்டு எழுந்தார்கள்! ஐயா வைகுண்டர் தலைப்பாகை அணிந்து தனிமதமேகண்டார். கலவரங்கள் தொடர்ந்தன! வழக்குகளும் தொடர்ந்தன. மானம் காக்க நாஞ்சில் மண் முழுவதும் மனிதப் பலி கொடுத்தார்கள். 37 வருட போராட்டத்திற்கு பிறகு ஆங்கிலேயர்களின் நெருக்கடிக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் பணிந்தது! 1859 ஆம் ஆண்டு அனைத்து பெண்களும் குப்பாயம் அணியலாம் என்று மன்னன் உத்தரவிட்டான்.
 இதில் 18ஜாதிகள் அடக்கம்.. அத்தகைய வீர மூதாதையருக்கு பிறந்த மூதேவிகள் தான் இன்றும் நம்பூதிரிகளின் குண்டிகளுக்கு குடை பிடித்துக் கொண்டு திரிகின்றன.

                 *மருத்துவம் *
                 ---------------------
1820 களில் ஆரம்பித்த காலரா தொற்று நோயால், இந்தியா முழுவதும் பிணங்கள் கொத்து கொத்தாக விழுந்து கொண்டிருந்தன! மருந்தே இல்லாத காலராவிற்கு பலியானவர்கள் 15 இலட்சம் பேரென்று புள்ளி விபரம் சொல்கிறது! அந்த நேரத்தில் மெடிக்கல் மிஷனால் 1838 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது தான் நெய்யூர் மருத்துவ மனை! உலகின் பழமையான மிஷன் மருத்துவ மனை.! இந்தியாவின் முதல் புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் என்று அதற்கு அளவில்லாத பெருமைகள் உண்டு. டாக்டர். தாம்சன், டாக்டர். வேத மாணிக்கம் ஆகியோரால் 1883 ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் கட்டப் பட்டது மார்த்தாண்டம் மிஷன் மருத்துவமனை. ( பொன்னாரின் சிலுவைப் பாலம் ஆரம்பிக்கிற இடம்) 1895 இல் சால்வேஷன் ஆர்மியால் வடசேரியில் கட்டப் பட்டது கேத்ரின் பூத் மருத்துவ மனை! 1936 இல் குளச்சலில் கட்டப் பட்டது சார்லஸ் பீஸ் தொழுநோய் மருத்துவ மனை.! இன்னுமுண்டு பட்டியல்.! இன்று போல கிட்னியை விற்று கல்லீரலை ரிப்பேர் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவை அத்தனையும் இலவச மருத்துவ மனைகள்.! நாஞ்சில் மண்ணில் காலராவிற்கு தப்பித்த யாரோ ஒருவனின் சந்ததி தான் நம்மிடம் "பார்.. பார் .! குஜராத்தை பார்" என்று அக்குளை சொறிகிறான்.!

                  *கல்வி !!!.*
                  -------------------
 நாஞ்சில் நாட்டு கிறிஸ்தவ மிஷினறி பள்ளிக் கூடங்களை குறித்து தனித்து எழுத வேண்டிய அவசியம் இல்லை.! இலவச கல்வி வழங்கிய பல பள்ளிக் கூடங்கள் நூறு வயதைக் கடக்கின்றன.  St. JOSEPH'S H.S.S., THIRUTHUVA PURAM நூறாவது வயதை நெருங்குகிறது !!!. (ஊர்ல இருந்து கன்னியா ஸ்திரீகளின் லீலைகளைப் பாரீர் என்று Face Book  இல் Post போடுற  தம்பிங்க எல்லாம் இங்க படிச்சவங்க தான்) Matric, CBSE எல்லாம் இப்போதைய கதை! 1893 இல் கட்டப் பட்டது ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ். ஹோலி க்றாஸ் 1935, நேசமணி கிறிஸ்தவ கல்லூரி 1964 (நேசமணி யாருண்ணு கேட்டிராதல மக்கா)

இப்போது சொல்லுங்கள்.! மதம் மாறியது கோதுமைக்கும் பால் பவுடருக்குமா..? .. சரி... மாடனும் இசக்கியும் தானே நாஞ்சில் மண்ணின் தெய்வங்கள்.! அவர்கள் இப்போது எங்கே..? எப்போது முதல் இந்து ஆனார்கள்..? மோடி,  அமித்ஷாக்கள் இத்தனை காலம் எங்கு இருந்தார்கள்.? RSS ம் BJP யும் எங்கள் மண்ணில் உருக்கிய வெண்ணெய்தான் என்ன...?

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ஏன் இப்படி இந்த கொலை வெறி மோடி சர்க்கார் மீது ஆத்தாடி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...