முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படிக்கப்படிக்க நான் உங்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்துகிறேன்.

Subbiahpatturajan

Cinartamilan

இறைவனின் அருள் இல்லாமல் சந்தேகங்கள் விலகுவதில்லை. ஆன்ம அனுபூதி கிடைத்த பிறகு தான் அனைத்து சந்தேகங்களும் நீங்கும்.
- 🌸
குழந்தை தந்தையின் கையை பிடித்து நடந்தால் ஒருவேளை கீழே விழலாம். ஆனால் தந்தை குழந்தையின் கையை பிடித்திருந்தால் கீழே விழ வாய்ப்பே இல்லை. மன ஏக்கத்துடன் அழுதால் இறைவனே நமது கையை பிடித்து வழிநடத்தி செல்வார்.

சுவாமி விவேகானந்தரின்வீர மொழிகள்
…..
நண்பர்களே என் நாட்டு மக்களே ! உபநிடதங்களை அதிகம் படிக்கப்படிக்க நான் உங்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்துகிறேன். வலிமை வலிமை, நாம் வலிமை பெறுவதற்கான செயல்முறை வழி அவற்றுள் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு வேண்டுவது வலிமை வலிமைதான் . அதை யார் நமக்குத் தருவார்கள்?

நம்மைப் பலவீனப்படுத்த ஆயிரக்கணக்கான கதைகள் வேண்டிய அளவு உள்ளன. உலகின் நூல்நிலையங்களுள் முக்கால் பங்கை நமது புராணக் கதைகளால் நிரப்பிவிடலாம். நம் இனத்தைப் பலீனப்படுத்துகின்ற அனைத்திற்கும் கடந்த ஆயிரம் வருடங்களாக நாம் இடம் கொடுத்துவிட்டோம் . அதன் விளைவாக நம்மை மிதிக்கத் துணிந்த ஒவ்வொருவரின் கால்களின் கீழும் வெறும் புழுக்களாகவே ஆகிவிட்டோம்.



ஒருவனுடைய ஆயுள், செய்யும் வேலை, வசதி, கல்வி, மரணத்தின் தேதி ஆகியவைகள் கருவிலேயே நிச்சயக்கப்படுகிறது.

கவிஞர் கண்ணதாசனின் தத்துவங்கள்
.
உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘தலைவிதி’ என்று கூறப்படுகிறது.
ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது.
பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.
ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?
நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன.
நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்தே.
மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.

🌿🌿🌿
திரிகடுகம்

🌿🌿🌿

வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும், கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும், பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனும் ஆகிய இம்மூவரும் துன்பத்தையே அடைவர்.
..
சிரிக்கும் புத்தர்
.......
அமெரிக்காவில் சீன தெருவில் அமைக்கப்பட்டுள்ள செட்டியார் பொம்மை சிலையை பற்றிய கதை இது. அந்த சிலையை சிரிக்கும் புத்தர் என்றும் அழைப்பர். உண்மையில் அந்த சிரிக்கும் புத்தர் ஒரு ஜென் துறவி. ஆனால் அவர் அப்படி ஒரு ஜென் துறவி என்று சொல்லி பெருமைப்படும் நபர் அல்ல.

அவர் எப்பொழுதும் சந்தோசமாக ஒரு மூட்டையில் சாக்லேட், பிஸ்கட், நட்ஸ் போன்றவைகளை நிரப்பிக் கொண்டு வழியில் பார்க்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக செய்து வந்தார்.

அவர் எந்த ஒரு ஜென் பக்தர்களை பார்க்கும் போதும், அவர்களிடம் ஒரு ரூபாய் கொடு என்று கை நீட்டி கேட்பார்.

ஒரு நாள் அவர் மற்றொரு ஜென் துறவியை பார்த்தார். அப்பொழுது அந்த மற்றொரு ஜென் துறவி இவரிடம் "ஜென் வாழ்கையின் முக்கியத்துவம் என்ன?" என்று வினவினார்.

இவர் உடனே அவர் சுமந்து கொண்டு இருந்த, அந்த மூட்டையை கீழே வீழ்த்தினார்.

பின்னர் அந்த மற்றொரு ஜென் துறவி மறுமுறை அவரிடம் "ஜெனின் இயல்பாக்கம் என்ன?" என்றார்.

அதற்கு அந்த சிரிக்கும் புத்தரான ஜென் துறவி மீண்டும் அந்த மூட்டையை தன் தோளில் சுமந்து அவர் வழியே அவர் சென்றார்.
..............
ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் பொக்கிஷம் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் பொக்கிஷம் இருப்பதாக பேசிக்கொண்டனர். இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, பொக்கிஷத்தை தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்று, தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழும்  இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.

அதுவரை வியாபாரத்தின் மீது முழு கவனம் செலுத்திய அவன் பொக்கிஷத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான். பொக்கிஷத்தைப் பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டிருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் "இப்போது தான் உன் நிழல் பொக்கிஷம் உள்ள இடத்தை சரியாக காட்டுகிறது. அதுவும் அந்த பொக்கிஷம் வேறு எங்கும் இல்லை, உன்னுள் தான் உள்ளது" என்று சொல்லிச் சென்றார்.
ஆகவே இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்வதை விட்டு, இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால். கடைசியில் இது நான் நடக்கும்
வேதம்
🌿🌿🌿
ரிக்வேதம் ஐதரேய உபநிஷதம்

15. ஓட முயற்சித்த உணவை மனிதன் கேட்பதன்மூலம்
பிடிக்க முயற்சித்தான். முடியவில்லை. கேட்பதால்
பிடிக்க முடிந்திருந்தால் 

உணவு என்று சொல்வதாலேயே
அவன் திருப்தி அடைந்திருப்பான்.

🌸 🌸 🌸..

மனு தர்ம சாஸ்திரம்

🌸 🌸 🌸
எந்தப் பெண், வஸ்திரங்களும், ஆபரணங்களும் பெற்று சந்தோஷமாக இல்லையோ, அந்தப் பெண் தன் கணவனை சந்தோஷப் படுத்த மாட்டாள். எனவே அந்தக் கணவனுக்கு குழந்தை ப் பாக்கியம் கிட்டாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...