முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஒரு விஷயத்தை சொல்றேன் யாருகிட்டேயும் சொல்லாதீங்க...

Subbiahpatturajan


“ஒரு விஷயத்தை சொல்றேன்  யாருகிட்டேயும் சொல்லாதீங்க...

நேர்மை பழகு...

“எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள் பேசிய எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை” நூற்றாண்டுக்கு முன்னால் சாம் ரேபன் சொன்ன வார்த்தையின் அடத்தி அதிகமானது.

எது முக்கியமானதோ அதைப்பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயம் இந்த நேர்மை....

நாம் பொருளாதாரம், இலட்சியம், புகழ் எனும் விஷயங்களுக்காய் அன்றாடம் ஓடுகிறோம். ஆனால் நேர்மையைக் குறித்துப் பேசுவதற்கு மறந்து போய்விடுகிறோம்....

அதிகபட்சம் நமது குழந்தைகள் நேர்மையை அறிவது ஆரம்பப்பாடசாலை புத்தகங்களில் மட்டுமே என்று கூடச் சொல்லலாம்.

சின்ன வயதில் குழந்தைகளுக்கு நேர்மையையும், உண்மையையும் பற்றிப் பேசிவிட்டு நாமே அதை நிறைவேற்றாமல் இருக்கிறோம். அப்போது நமது அறிவுரைகளும் குழந்தைகளின் மனதுக்குள் சென்று தங்குவதில்லை.

நாட்டில் இன்று நேர்மைக்குப் பஞ்சம். நேர்மை இயல்பாகவே மனிதர்களிடம் இருக்க வேண்டியது. ஆனால் இன்றைய உலகில் நேர்மையாளர்கள் அருகி வரும் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தான் தவற விட்ட பையைத் திருப்பித் தரும் ஆட்டோக்காரர் நம் கண்ணுக்கு வியப்பின் சின்னமாகத் தெரிகிறார்!

நேர்மையை விதைப்பவர்கள் மட்டுமே நம்பிக்கையை அறுவடை செய்ய முடியும். ஆனால் நேர்மையாய் இருப்பதும், உண்மையாய் இருப்பதும் எளிதா? கேட்பதற்கு எளிமையாய் தோன்றினாலும் நிஜமான வாழ்க்கையில் மிகவும் கடினமான விஷயம் இது! இதைப் பின்பற்ற வேண்டுமானால் உறுதியான மனம் ரொம்ப அவசியம்.

அன்றாட வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த மன உறுதியைக் காற்றில் பறக்க விட்டு விடுகிறோம். நம்மிடம் ஏதும் தப்பு இல்லை என்று சாதிப்பதற்காக சில வேளைகளில் உண்மையை மறைக்கிறோம்.

அடுத்தவர்களுடைய தோள்களில் பழியைச் சுமத்த பல வேளைகளில் நேர்மையை கைவிடுகிறோம். தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் எளிய வழி நேர்மையைக் கைவிடுவது தான் என பலவேளைகளில் முடிவுகட்டி விடுகிறோம்.

பிறருக்கு முன்னால் அவமானப்படக் கூடாதே என்பதற்காக சில வேளைகளில் பொய் முகமூடி போடுகிறோம்.

வறட்டுக் கவுரவம் கூட பல வேளைகளில் நம்மைக் குறித்தும், நமது பின்புலத்தைக் குறித்தும் அடுக்குப் பொய்களை வாரி இறைக்க காரணமாகிவிடுகிறது.

சிலருடன் கருத்து வேற்றுமை வரக் கூடாதே என்பதற்காக பொய்க்கு வக்காலத்து வாங்கி மௌனமாய் இருக்கிறோம்.

சிலவேளைகளில் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்பதற்காகக் கூட உண்மையை மறைக்கவும், நேர்மையை விலக்கவும் செய்கிறோம்.

இப்படி பல வேளைகளில் நம்முடைய மனதின் உறுதி கொஞ்சம் ஒளிந்து கொள்ள நேர்மையும் கூடவே காணாமல் போய் விடுகிறது. மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை பொருளாதாரமல்ல, மதிப்பீடுகளே. நல்ல மதிப்பீடுகளின் மேல் கட்டமைக்கப்படும் வாழ்க்கையே சமூக வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆதாரம்.

எந்த ஏரியாவில் நீங்கள் அதிகம் பொய் சொல்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்.

 உங்களுக்கே உங்களுடைய தடுமாற்றத் தளம் புரிந்து விடும். அது ஒரு குறிப்பிட்ட சூழலாய் இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட நபரிடமாய் இருக்கலாம். எங்கே தடுமாறுகிறீர்கள் என்பதைக் கண்டுகொண்டால் உங்கள் நேர்மையையும், உண்மையையும் அந்த இடத்தில் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

பண விஷயத்தில் தான் நேர்மையற்று இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை விலக்க என்னென்ன செய்ய முடியும் என யோசியுங்கள். நேர்மையான மனம் கொள்ளும் நிம்மதி அளவிட முடியாதது. வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றுவது முதல் மனைவியிடம் பொய் சொல்வது வரை என்னென்ன என்பதை சிந்தியுங்கள். மன்னிப்புக் கேட்கவோ,

 உங்களுக்குச் சொந்தமில்லாததை திருப்பிக் கொடுக்க  தயங்கவே தயங்காதீர்கள்.

பொய் பயத்தின் பிள்ளை. மிகுந்த தைரியசாலிகளே நேர்மையாளர்களாய் இருக்க முடியும். உங்களுடைய பலவீனத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியமானாலும் சரி, மேலதிகாரியிடம் உண்மையைச் சொல்லும் கம்பீரமானாலும் சரி – நேர்மையின் பின்னால் தைரியம் இருக்கிறது. அச்சமற்ற மனதில் மட்டுமே நேர்மையும், உண்மையும் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும். எனவே நேர்மையினால் எழும் விளைவுகளைச் சந்திக்கலாம் எனும் மனதிடம் கொள்ளுங்கள்.

நேர்மையாளர்களை “பொழைக்கத் தெரியாதவன்” என உலகம் வெளியில் பேசினாலும் அவர் மீது உயரிய மரியாதையை சமூகம் வைத்திருக்கும். அவருடைய வார்த்தைகளுக்கு அசையாத ஆணியின் நம்பிக்கையும் இருக்கும்.

உண்மையாய் இருக்க வேண்டுமெனில் உண்மையாய் சிந்திக்கவும் வேண்டும். கண்களால் காணாதவற்றை வாயால் அறிக்கையிடாமல் இருப்பது நல்லது. பலருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் பலவற்றைக் கற்பனை செய்து கொள்வதும், காதில் கேட்பவற்றுக்கு ஆடைகட்டி அலைய விடுவதும் தான். கேட்பதையும், பார்ப்பதையும், படிப்பதையும் “உண்மை”யின் மனம் கொண்டு வாசிக்கப் பழகினால் உங்கள் செயல்களிலும் அது வெளிப்படும்.

“இப்படியாய் இருக்கலாம்”, “இதுவாக இருக்கலாம்”, “அப்படி நடந்திருக்கலாம்” போன்ற கணிப்புகள் பெரும்பாலும் நேர்மையற்ற உரையாடல்களுக்கு முதல் சுவடு எடுத்து வைக்கும். அதைத் தவிர்ப்பது நேர்மையான பார்வையின் அடையாளம்.

ஒரு பொய் ஒரு பொய் தான், அது எப்போதுமே உண்மையாவதில்லை. அது பக்கத்து வீட்டு ரோஜாவில் பறித்த பூவுக்காகவும் இருக்கலாம், அலுவலகத்தில் திருடிய பென்சிலாகவும் இருக்கலாம். பொய் பொய் தான்.

 சின்ன விஷயங்களில்நேர்மையாய் இருக்கப் பழகினால் பெரிய விஷயங்களிலும் அந்தப் பழக்கம் வந்து ஒட்டிக் கொள்ளும். எனவே சின்ன விஷயங்களிலிருந்தே உண்மை சொல்வதை ஆரம்பியுங்கள்.

பிறரைக் காயப்படுத்தாமல் சொல்லப்படும் பொய்களை “வெள்ளைப் பொய்கள்” என்று சொல்வார்கள். பொய்மையும் வாய்மையிடத்து என வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட பொய்களையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. “இந்த டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கு” என்பது போன்ற பொய்கள் யாரையும் காயப்படுத்தாது. ஆனாலும் அது உங்களுடைய உண்மைக் குணத்தை கறைப்படுத்தும். சொல்ல முடியாத மனநிலையெனில் அமைதி காப்பது நல்லது.

நேர்மையாய் இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல குணாதிசயத்தை உருவாக்கித் தரும். நீங்கள் தொடர்ந்து நேர்மையை நேசிக்கும்போது உங்கள் மீதான நம்பிக்கை பல மடங்கு வலுவாகும். உங்கள் வாழ்க்கையை பிறர் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கவனிக்கத் துவங்குவார்கள். 

நீங்கள் பிறருக்கு ஒரு வழிகாட்டியாகவே மாறிப் போவீர்கள்.

சில விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. அது நேர்மையாளராய்க் காட்டும் என்பது பொதுவான கருத்து. உண்மையில் அப்படியல்ல. பக்கத்து வீட்டுப் பையன் தம் அடிக்கும் விஷயத்தை மறைப்பதை விடச் சிறந்தது பெற்றோரிடம் உரைப்பதே!

ஒரு செயலைச் செய்கிறீர்களெனில் அது உங்களைப் பிறகு பொய் சொல்ல வைக்குமா என்பதை யோசியுங்கள். 

அப்படிப்பட்ட செயல்களைச் செய்யாதீர்கள் என்பது பெரியவர்கள் சொல்லும் வழி. திருட்டுத் தனமான செயல்கள் உங்களை நிச்சயம் பொய்சொல்ல வைக்கும். எனவே செயல்களில் நேர்மையைப் புகுத்துங்கள்.

பாதி உண்மை என்பது ஒரு முழு பொய்! உண்மை என்பது முழுமையானது. கொஞ்சம் உண்மை சொல்லிவிட்டால் உங்கள் மனசாட்சியின் கேள்வியிலிருந்து தப்பிவிடலாம் என தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். உண்மையை பேசுங்கள். உண்மை எந்தக் கேள்வியைக் கண்டும் அஞ்சுவதில்லை.

“ஒரு விஷயத்தை சொல்றேன் யாருகிட்டேயும் சொல்லாதீங்க...

என பீடிகையோடு வரும் நபர்களிடம் “அந்த விஷயத்தை என்கிட்டேயும் சொல்லாதீங்க” என நீங்கள் ஒதுங்கிக் கொண்டால் நல்லது. வெளியே சொல்லாத உண்மையும், பொய்யின் இன்னொரு வடிவமே.

பொய் சொல்வது நமக்குள்ளே நம்மை அறியாமலேயே குற்ற உணர்வை உருவாக்கிவிடும். கூடவே குழப்பத்தையும் தன்னம்பிக்கைச் சிதைவையும் உருவாக்கும். மனசு ரொம்பக் கனமாய் இருக்கிறது என்பவர்கள் பல வேளைகளில் உண்மைகளை நேசிக்காதவர்களாய் இருப்பார்கள்.

நேர்மை முளைவிட வேண்டிய முதல் இடம் குடும்பம். குடும்ப உறவினர்களிடையே பொய் கலக்காத உண்மை உரையாடல்களும், நேசமும் இருக்கும்போது அந்த வாசம் சமூகத்திலும் வீசும். பிரச்சினைகள் வருமோ என நினைத்து போலித்தனமாய் வாழ்வதை விட நேர்மையாய் வாழ்ந்து பிரச்சினைகளைச் சமாளிப்பதே சிறப்பானது.

ஆபிரகாம் லிங்கன் இளம் வயதில் ஒரு கடையில் வேலை பார்த்தார். வாடிக்கையாளர்களிடம், அன்பாகவும், பணிவாகவும், நேர்மையாகவும் இருப்பதில் அவர் வல்லவர். ஒருமுறை நள்ளிரவில் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்கையில் கணக்கு இடித்தது! ஒரு நபருக்கு சில காசுகள் கம்மியாகக் கொடுத்திருப்பதைக் கண்டுபிடித்தார். தாமதிக்காமல் கடையைப் பூட்டிக் கொண்டு வெகு தொலைவில் இருந்த அந்த நபரைத் தேடிப் போய் மிச்ச காசை கொடுத்து விட்டு வந்தார். நேர்மை என்பது அவருக்குள் வேர்விட்டு வளர்ந்திருந்தது.

நாம் பல வேளைகளில் எது உண்மை என்பதை விட, எதைச் சொல்லலாம் என்பதிலேயே கவனத்தைச் செலுத்துகிறோம். பல மனிதர்களை விட ஓடாத வாட்ச் நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது மிகச் சரியான நேரத்தை அது காட்டும்.

நேர்மை பழகு   ஒரு விஷயம் சொல்றேன் யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க 
அதுவே அழகு


கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
இப்போது உள்ள காலத்தில் இது சாத்தியம் படுமா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...