முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

First realize that not all Indian citizens are fools ...?!இந்திய பிரஜைகள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை என்பதை உணருங்கள்...?!

Subbiahpatturajan


இந்திய பிரஜைகள் எல்லோரும் முட்டாள்கள் இல்லை என்பதை உணருங்கள்...?!

மோடிக்கு_காவல்துறை உயர் அதிகாரியின் பதில்...
கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ?
என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு...
#திரு. #ஜூலியஸ்ரெபைரோ,
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அவர்களின் பதில்...
Mr. JULIUS REBERIO I.P.S.,
Ex Director General of Police - Maharashtra
Ex Police Commissioner - Mumbai
Ex Director General of Police - Gujarat
Ex Director General of Police - Punjab
ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய
நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்...
மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்...

இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்...


நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள்.
இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.
1947 இல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்...

ஆங்கிலேயன் விட்டுப்போன குப்பைகளைத்தவிர வேறு ஏதுமில்லை.
ஒரு பின் தயாரிக்கக்கூட எவ்விதமான வசதியையும் அவன் விட்டுவிட்டு போகவில்லை...

இந்தியா முழுவதுமாக 20 கிராமத்தில் மட்டுமே மின்சார வசதி.

20 அரசர்களுக்கு மட்டுமே தொலைபேசி.

குடிதண்ணீர் கிடையாது.
நாடு முழுதும் 10 சிறிய அணைக்கட்டுகள்...

ஒரு மருத்துவமனையும் கிடையாது.
ஒரு கல்வி நிறுவனம் கிடையாது,
விவசாயத்திற்கு நீர் வசதி, பயிர்களுக்கு பூச்சி மருந்து எதுவுமே கிடையாது...


வேலைகள் கிடையாது.
பசி பஞ்சம் தான் நாட்டில். பிஞ்சுக் குழந்தைகள் கொத்துக்கொத்தாக மரணம்...

எல்லையில் மிக சிறிய அளவில்
இராணுவ அதிகாரிகள்.

4 போர் விமானங்கள்.
20 பீரங்கிகள்.
நாட்டின் நான்கு எல்லைகளும் திறந்த நிலை...

குறைவான அளவில் சாலைகள் மற்றும் பாலங்கள். காலியான கருவூலங்கள்...

இந்த நிலையில்தான் நேரு பதவியேற்றார்...

60 வருடங்கள் கழித்து இந்தியா ?

உலகில் மிகப்பெரிய இராணுவ சேவை.
ஆயிரக்கணக்கில் போர் விமானங்கள், பீரங்கிகள், இலட்சக்கணக்கான தொழில்நுட்ப ஸ்தாபனங்கள்...

அனைத்து கிராமங்களிலும் மின் வசதி.
நூற்றுக்கணக்கான மின்சார உற்பத்தி நிலையங்கள்.
இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள்.
புதிய இரயில் நிலையங்கள்.
ஸ்டேடியங்கள்...

சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள். அனைத்து பிரஜைகள் இல்லங்களில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலைசெய்ய கட்டமைப்பு.
வங்கிகள்.
பல்கலைக்கழகங்கள்...

AIIMS.
IIMS.
அணு ஆயுதங்கள்.
நீர்மூழ்கி கப்பல்கள்.
அணு ஆயுத ஆராய்ச்சி நிறுவனங்கள்.
விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிலையம். பொதுத்துறை நிறுவனங்கள்...

பல வருடங்களுக்கு முன்பே இந்திய இராணுவம் #லாகூர் வரை சென்று, #பாகிஸ்தான் நாட்டை இரண்டாக ஆக்கியது.
அப்போது ஒரு இலட்சத்திற்கும் மேலான பாகிஸ்தான் நாட்டவர்கள் நம்மிடம் சரணடைந்தது...

இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்தது.
வங்கிகள் அனைத்தையும் தேசிய உடைமை ஆக்கியது இந்திரா காந்தி.
கணினி அறிமுகம்.
அதன் மூலம் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் அதிக வேலை வாய்ப்புகள்.்.

#மோடிஜி !
நீங்கள் ப்ரதான் மந்திரி ஆனது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மூலம்.
நீங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்தியா பொருளாதார நாடுகளின் உலக அளவில் முதல் 10 இல்...

இதை தவிர
GSLV.
மங்கள்யான்.
மெட்ரோ ரெயில்.
மோனோ இரயில்.
பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்.
ப்ரித்வி ஏவுகணை.
அக்னி ஏவுகணை.
நாக் ஏவுகணை.
அணு ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள்.

இவைகள் அனைத்தும் நீங்கள் பிரதமராவதற்கு முன்பே சாதிக்கப்பட்டு விட்டது...

தயவுசெய்து நீங்கள் மக்களிடம் வந்து
60 வருடங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.
கடந்த 6 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.்.

பெயர்கள் மாற்றம்.
சிலை அரசியல்.
மாட்டு அரசியல்.
தோல்வியுற்ற பண மதிப்பு இழப்பு (Demonetization).
அனுபவில்லாமல் செயல்பட்ட GST.
மக்களை வெயிலிலும், மழையிலும் வரிசையில் நிற்க வைத்து அவர்களது பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது...

[] பா.ஜ க எதிர்கட்சியாக இருக்கும்போது
எதிர்த்த, வெளிநாட்டு நேரடி
பண முதலீடுகளை, இப்போது
வெட்கமில்லாமல் ஆதரிப்பது...[]

நாட்டை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் விற்றது,
அம்பானியின் இரண்டு மாத கம்பெனிக்கு ரஃபேல் விமான ஆர்டரை கொடுத்து.
இந்திய நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ செயலிழக்க செய்தது. BSNL நிறுவனத்தை மூடுவதற்கு அம்பானியின் ஜியோ மூலமாக செயல்படுவது...

குருட் ஆயில்
(கச்சா எண்ணெய்) மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது, பெட்ரோலும் டீசலும், எரிவாயுவையும்
அதிக விலைக்கு விற்குமளவிற்கு வரிகள்...

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்தஏழை, நடுத்தர மக்களின் பணமான ரூ 1,771 கோடிகளை, மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருப்பதாக சொல்லி தண்டத்தொகை...

#சப்கே_சாத்,
#சப்கோ_விகாஸ்
யாருக்கு என்றால்
அமித்ஷா, அவரின் மகன் சவுரியா தோவல், அம்பானி, அதானி, பாபா ராம்தேவ் பதஞ்சலி குழுமம் மற்றும் பா.ஜ.க வின் ஸ்பான்சர்கள்...

கங்கை நதியை தூய்மைப்படுத்த
ரூ 3,000 கோடிகள்...
கங்கையில் குளிக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் தெரியும் இந்த
பணம் எங்கே என்று ?
இது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரமல்ல...

ஒவ்வொரு முறையும் 60 ஆண்டுகள் ஒன்றுமே நடக்கவில்லை..
என்று சொல்லும்போது என்னுடைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது...

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ம்ம் ம்ம் சற்று யோசிக்க வேண்டிய விஷயம் மோடி கொஞ்சம் தீவிர வாதிகள் ஒழிப்பு காஷ்மீர் மாநிலத்தில் எடுத்து காட்டுகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...