முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் டாப் 10 மருத்துவ நகரங்களில் ஒன்று வேலூர்...

Subbiahpatturajan

#cinartamilan Cinartamilan #advice #Vellore

வேலூரின் வரலாறு

வேலூரில் வரலாறு
 மற்றும் முக்கியத்துவம் தெரியாமல் வெயிலுக்கும் ஜெயிலுக்கும்  மட்டும் தான் வேலூர் என்றும் பொய்யான ஒரு கவிதையை பல வருடங்கள் சொல்லி கொண்டுஇருக்கின்றனர் 

(7 அதிசயங்கள் கொண்ட ஊர்)

வேலூர் மாவட்டத்திற்கு எதற்கு திட்டங்கள், வேலூருக்கு எதற்கு விமான நிலையம், வேலூருக்கு எதற்கு sipcot,வேலூருக்கு எதற்கு நகர கட்டமைப்பு,வேலூர் முக்கியமான ஊர் அல்ல என்று கேலி செய்யும் அரை வேகாடு அறிவு ஜெவிகளுக்கு இந்த பதிவு

வேலூரின் பங்களிப்பை இருட்டுடடைப்பு செய்யும் ஊடங்கள் மற்றும் சினிமா துறைனர் வேலூரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .

சொர்க்கமே என்றாலும் எங்க
வேலூரை போல வருமா? 

இந்திய ராணுவத்திற்கு தமிழ் நாட்டில் இருந்து அதிக இராணுவ வீரர்கள் தருகின்ற எங்கள் வேலூரின் வீரம் மிக்க இராணுவப்பேட்டை என்கின்ற கமாவான்பேட்டை 

அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர், இந்தியாவின் முதல் சுதிந்திர போர் 

அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர் வேலூர் காங்கேயநல்லூர்.

தந்தை பெரியாரின் துணைவியார் மணியம்மையாரின் சொந்த ஊர்

சுதந்திர இந்தியாவின் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய முதல் தேசியக்கொடியை தயாரித்து தந்த எங்கள் ஊர் குடியாத்தம்.

கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து முதல் அமைச்சராக தமிழ் நாட்டிற்கு கொடுத்து அழகு பார்த்த எங்கள் குடியாத்தம்

தமிழ் திரைபட  துறையின் பழமையான சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் தந்த குடியாத்தம்

விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்த எங்கள் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார். 

தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாப்பேட்டை.

இந்தியாவின் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரி.

புகழ்பெற்ற ராஜாளி கப்பல்படை விமானதளம் உள்ள அரக்கோணம்.

ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவலுர்.

திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசனாரை தந்த வாலாஜாப்பேட்டை அடுத்த வேலம்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனை தான் தயாரித்த "பராசக்தி "படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய வேலூர் நேஷனல் திரைஅரங்கத்தின் பெருமாள் முதலியார் பிறந்த பூட்டுதாக்கு.

தென் இந்தியாவின் முதல் திரை படத்தை தயாரித்து இயக்கிய வேலூர் நடராஜ், தமிழ் திரைப்படத்தின் தந்தை 

சிந்தனை செல்வர் சி.பி.சிற்றரசுவை தந்த வேலூர்.

"பாட்டுப்பாடவா பார்த்து பேசவா "புகழ் ஏ.எம்.ராஜா பிறந்த கிளித்தான் பட்டறை.

பாடகி வாணி ஜெயராம் சொந்த ஊர் வேலூர்.

டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.

மனுநீதி நாள் திட்டத்தை அறிமுகப்படுத்திய பத்மநாபன். IAS பிறந்த ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சி.

சென்னை வானொலியில் "இன்று ஒரு தகவல் "நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய வானொலி நிலைய இயக்குநர் கோபால் பிறந்த ஆற்காடு.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் நடிகை "குமாரி சச்சு "வை தந்த ஆற்காடு அடுத்த புதுப்பாடி.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளர் "தேனிசை தென்றல் "தேவாவின் சொந்த ஊர் ஆற்காடு அடுத்த மாங்காடு.

இரண்டு "ஆஸ்கார் அவார்டு "களை அள்ளி மூன்றாவாது ஆஸ்கார் அவார்டுக்கு "பீலே "படத்தின் மூலம் அஸ்திவாரம் போட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை  சேகரை தந்த குடியாத்தம் 

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அவர்கள் பிறந்த வாலாஜா செங்காடு.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர்

சென்னையின் புகழ்பெற்ற மகளிர் கல்லுரி எத்திராஜ் கல்லுரின் நிறுவனர் வேலூர் எத்திராஜ்

இந்தியா அளவில் அதிக ரயில்கள் நிற்கும் ரயில் நிலையம் வேலூர் மாநகரின் காட்பாடி ரயில் நிலையம், நாள் தோறும் 300 ரயில்கள் நிற்கின்றது

300 ரயில்கள் நிற்பதற்கு காரணம், வேலூருக்கு நாள் தோறும் 18,000 முதல் 20,000 மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்து வருகின்றனர்

வட தமிழ் நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது மிக பெரிய நகரம் வேலூர்

சென்னைக்கு நிகரான மருத்துவ சுற்றுலா நகரம் வேலூர் 

முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் (Naidu Hall founder)

தேமுதிக  தலைவரான விஜயகாந்த் மனைவி பிறந்த குடியாத்தம் அடுத்த செம்பேடு

சந்தனம் விளையும் ஜவ்வாது மலை

சாப்பிட்டு ருசிக்க ஆற்காடு மற்றும் ஆம்பூர் பிரியாணி.

இந்தியாவின் இரண்டாவது மிக பழமையான அரபிக் கல்லுரி உள்ள ஊர் வேலூர் 

தென் இந்தியாவின் மதர் மதராசா உள்ள ஊர் வேலூர் 

தென் இந்தியாவின் முதல் தங்க கோயில் உள்ள ஊர் வேலூர்

இந்தியா மற்றும் உலகளவில்  பெரு மாநகராங்களுக்கு நிகராக சிறந்த மருத்துவமனை, மருத்துவ கல்லுரி மற்றும் பொறியாளர் பல்கலைக்கழகம் பெற்ற ஒரே சிறிய மாநகரம் வேலூர்

இந்தியாவின் டாப் 10 மருத்துவ நகரங்களில் ஒன்று வேலூர் 

வேலூரின் வீரம் மற்றும் வரலாற்றை பாராட்டி இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஸ்கோட்லண்ட் நாட்டில் வேலூரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது, இந்த அங்கீகாரம் இந்தியாவில் வேறு எந்த நகரத்துக்கும் இல்லை 

தமிழ் நாட்டின் டாப் 6 GDPயில் வேலூர் மாவட்டம்மும் ஒன்று 👍

சொர்கமே என்றாலும் எங்க
வேலூரை போல வருமா? 😇😇😇😍😍😍

#Vellore

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பெருமை மிகு ஊர் இது ஜெயிலை மட்டுமே பிரதானமாக வைத்து முன்னிலை படுத்தி மக்களின் மனதில் பதிய வைத்து விட்டார் போலா நாகரிக கோமாளிகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...