முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

100 crore plunder in the bank வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது

Subbiahpatturajan





மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா். 

 "இந்தப் பணம் அரசுக்கு_சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர், உங்களுக்குச் சொந்தமானது. அதனால், யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்..!

அனைவரும் அசையாமல் கீழே படுங்கள்" என்று மிரட்டியவுடன், படுத்துவிட்டார்கள்.  மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 

 "This is called 'Mind Changing Concept' Changing the conventional way of thinking."  

அங்கே ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், "இங்கு நடக்க போவது கொள்ளை.. கற்பழிப்பு அல்ல.." என்று மிரட்டி, அவளை அமர வைத்தான். 

 இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்
 
  "Being Professional & Focus only on what you are trained"
 
 கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன், கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான். "வாருங்கள்.. சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்.." என்று.....

மற்றொருவன் சொன்னான், "பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது. நேரம் அதிகம் செலவாகும். நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று அரசே நாளைய செய்திகளில் சொல்லி விடும்.

  இதைத்தான், படிப்பை விட  அனுபவம் சிறந்தது என்போம்..!

  "This is called 'Experience' Nowadays, experience is more important than paper qualifications..!"


  கொள்ளை நடந்தபோதே, வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவருடைய உயர் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார். 

 "வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம்.
 மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்.

  "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது இது தான். 

 "This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours." 

 இதை கேட்ட மற்றொரு அதிகாரி " வருடம் ஒரு கொள்ளை, இவ்வாறு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..??!!" என்றார்.  இதுதான் சுயநலமான உலகம்..! 

 "This is called Killing boredom World. Personal happiness is much more important than your job."

  மறுநாள் செய்திகளில், வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி. ஏனென்றால் அவர் பங்கு 50 கோடி.. 

 கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து, பணத்தை எண்ணத் தொடங்கினர் .  எவ்வளவு எண்ணியும், அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை.

  கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து, "நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்த வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், 80 கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_ இதற்குத் தான் படித்திருக்க வேண்டும்.."என்றான். 

 "True. Knowledge is nowadays very important than money in this world." 

 நம்_நாடு இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும் தான் ஆளப்படுகிறது..!

பாவம்_மக்கள்..!  -படித்ததில் பிடித்தது-  👉பிடிச்சிருந்தா  நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க..

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அடக் கடவுளே இது என்ன மாயம் கொடுமை இப்படி தான் நாட்டில் நடக்கும் போலே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...

வலம்புரி சங்குங்கின் பயன்களும் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கமும்

Subbiahpatturajan               வாழ்வில் வளம் சேர்க்கும்  வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும்.  வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.  சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.  அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் க...